நம் திருக்கோயில் சைவக் கல்லூரிக்கான நிதி திரட்டும் நோக்கத்தில் எதிர்வரும் 10.5.2025, ஷா அலாம், மிட்லண்ஸ் மாநாட்டு அரங்கில் விருந்து நிகழ்வு நடத்துவதற்கான ஏற்பாடு நடை பெற்று வருகிறது. இந்நிகழ்வின் மூலம் நாம் ரிம 2.4 மில்லியன் திரட்டும் இலக்கை வைத்துள்ளோம். சிலாங்கூர், கெர்லிங் பட்டணத்தில் சிவனாலயம் மற்றும் சைவக் கல்லூரி கட்டுவதே நமது நோக்கமாகும். இவ்விலக்கினை அடைய சித்தாந்த மாணவர், பொது மக்கள், தொழிலதிபர் மற்றும் அரசு சாரா இயக்கங்கள் பங்களிப்பை அறவாரியம் பெரிதும் எதிர்பார்க்கிறது. இப்பெருந்திட்டம் இந்து மக்களிடையே சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
கீழ்காணும் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தது 1 மேசையை வாங்கி உங்கள் ஆதரவுக் கரத்தை நீட்டலாம்.
அன்னபூரணா ரிம 200,000.00
கைலாஸ் ரிம 100,000.00
கேதார்நாத் ரிம 50,000.00
அமர்நாத் ரிம 20,000.00
அருணாச்சலம் ரிம 10,000.00
மேலதிக தகவல்களுக்கு
சிவத்திரு சரவணா
012-539 3915
நன்றி, சிவசிவ!