அறவாரியம் கோலகுபுபாரு மாவட்டத்தில் கெர்லிங் நகருக்கு அருகில் 133, 527 என்ற எண்களைக் கொண்ட மொத்தம் 7.5 ஏக்கர் அளவுடைய இரண்டு நிலப்பகுதிகளை வாங்கியுள்ளது. அளவைப் பணிகள் முடிந்து வரைபட நிறுவனம், நகர் வடிவமைப்பாளர் நிறுவனம் ஆகியன தெரிவு செய்யப்பெற்று மேம்பாட்டுப் பணிகள் முடுக்கப்பட்டுள்ளன.
திருக்கோயில், சைவக் கல்லூரி மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும இடம் கோலாலம்பூர் ஈப்போ பிளஸ் நெடுஞ்சாலையில் 120ஆம் புறச் சாலையில் லெம்பா பெரிஙின் வழியில் கோலாலம்பூரிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது. கேஎல்ஐஏ விமானத் தளம் 123 கிமீ தொலைவில் உள்ளது. தஞ்சோங் மாலிமிலிருந்து தெற்கு நோக்கிய பழைய சாலையில் 13 கி.மீ. தொலைவில் உள்ளது.